பிறந்ததிலிருந்து 21 வருடங்கள் அப்பா அம்மாவை விட்டு ஒரு நாள் கூட தனித்திருந்தது இல்லை, பள்ளியில், கல்லூரியில் சுற்றுலா சென்ற நாட்களைத்தவிர!


அமெரிக்காவில் மேற்படிப்பு படின்னு அண்ணா காட்டிய பாதையில், ஏதோ ஒரு தைரியத்தில் வெளிநாடு செல்லவும் தாயாராகிவிட்டேன், ஆனால்........புறப்படும் நாள் நெருங்க , நெருங்க.....இனம்புரியா பயம், கலக்கம்!
அப்பா கொடுத்த ஊக்கம், அண்ணா கொடுத்த தைரியம், நண்பர்கள் கொடுத்த உற்சாகம் எல்லாம் சேர்ந்து என் அம்மாவின் கண்ணீருக்கும் நடுவில், என் கண்ணீரை மறைத்து, விமானம் ஏற வைத்தது.


தனிமை பயனம்......அதுவும் நெடுந்தூரப்பயணம், அடிவயிற்றை கலக்கியது.பயந்து விழிக்கும் எனக்கு ஆறுதலாக என் பக்கத்து இருக்கையில் ஒரு 60 வயது மதிக்க தக்க இந்திய பெண். கணிவான பார்வையாலும், கலகலப்பான தன் பேச்சாலும் என்னை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு கொண்டுவந்தார்.இன்று வரை அந்த அன்பு 'ஆண்டி'யின் அன்பு தொடர்கிறது!




வரவேற்க அன்பு அண்ணா, அருமையான அண்ணி,அழகான குழந்தைகள்....காத்திருக்க, வியப்புடன் அமெரிக்காவில் தரையிறங்கினேன். அருமையான கவனிப்பு, பாசமலையில் குளியல் என்று அனைத்தும் இருந்தும், எதுவுமே இல்லாதது போன்ற ஒரு தனிமையுணர்வு தடுமாற வைத்தது.




இந்திய நேரத்தில்தான் தூக்கம் வந்தது சில நாட்களுக்கும், இரவில் வீட்டில் அனைவரும் உறங்கும்போது, தூக்கம் வராமல் அப்பா அம்மாவின் நினைவால் படுக்கையை கண்ணீரால் ஈரப்படுத்திய இரவுகள் கொடுமையிலும் கொடுமை!!




ஒருவழியாக கல்லூரிக்குச் செல்லும் நாளும் வந்தது. பள்ளிமுதல் கல்லூரி வரையில் முதல் வகுப்பிற்கு அப்பாதான் அழைத்துச்செல்வார். ஆனால் இங்கு....பிரம்மாண்டமான கல்லூரி வளாகத்தில் 'பேந்த பேந்த ' விழித்தபடி நான்.......நான் மட்டும்.




நண்பர்கள் அருகாமையில் குளிர்காய்ந்துவிட்டு இப்படி தன்னத்தனியாக இருக்கிறோமே, திருப்பி வீட்டுக்கு ஓடிவிடலாமா??? இங்கு புது நண்பர்கள் கிடைப்பார்களா?? இந்த அமெரிக்க மாணவர்கள் பேசுவது புரிந்தாலும் உடனே பதிலளிக்க நாவு வராமல் பிறளுமா?? [வெள்ளைகாரங்க எல்லாரும் 'ஒருமாதிரி' அப்படின்னு நண்பிகள் எல்லாம் சொல்லி சொல்லி 'அது' வேற ஒரு பயம்] இப்படி ஆயிரம் கேள்விகளுடன் வகுப்புக்குள் நுழைந்தேன்.




அஹா! ஒரு இந்தியப் பெண்........வாய் முழுவதும் பற்கள் தெரிய புன்னகையுடன் அவள் அருகையில் போய் அமர்ந்தேன், என் சிர்ப்பிற்கு பதிலுக்கு ஒரு 'புன்னகை' கூட கொடுக்கலானாலும் பரவாயில்ல, ஆனா அவ விட்ட 'லுக்கு' ....."இதென்ன இந்த பொண்ணு 'ஈ'ன்னு பல்லு காட்டுது'ன்னு ஒரு இளப்பமான பார்வை.




பார்வை எப்படி இருந்தாலும் பராவாயில்லை, நம்ம நாட்டு பொண்ணு, பேசி நட்பாகிக் கொள்ள வேண்டும் முடிவோடு....




"ஹலோ, ஐ அம் அம்மு, யு ஆர்??"




"......ஹும்...ஹலோ , நீலிமா"




"நைஸ் டூ ஸீ அன் இந்தியன், விச் பார்ட் ஆஃப் இந்தியா யு ஆர் ஃப்ரம்?'




"ஐ அம் ஃப்ரம் ஆந்திர பிரதேஷ்"




[ ஸ்கூல் ஸ்டுடண்ட்ஸ் பதில் சொல்றாப்ல சொன்னா!]




இப்படியாக பேச்சுக்கொடுத்து கொஞ்சம் லேசா அவ முகத்துல சிரிப்பு மாதிரி ஒரு லுக்கு வர வைப்பதிற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.




[ பின் நாட்களில் நானும் நீலிமாவும் நல்ல நண்பர்களான பின், முதல் அறிமுகத்தில் என் பட பட ஆங்கிலம் பார்த்து அவள் பயந்ததையும் அவளுக்கு ஆங்கிலத்தில பேச கொஞ்சம் கூச்சம் என்பதையும் அறிந்துக்கொண்டேன்]




முதல் நாள் வகுப்புகள், அழகான அறிமுகத்துடன் கழிந்தது. மதியம் உணவு இடைவேளை. அண்ணி கொடுத்தனுப்பிய 'டிஃபன் பாக்ஸ்'வுடன் எங்கு உட்கார்ந்து சாப்பிடுவது என்று முழித்துக்கொண்டிருந்தேன். தீடிரென ஒரு குரல்........."ஹலோ"




திரும்பிப்பார்த்தால், ஒரு இந்திய இளைஞன்,


இந்தியாவில் இருக்கிற வரைக்கும் , 'சைட்' அடிக்கும் பையனை முறைத்து முகம் சுளித்து பந்தா பண்ணிவிட்டு, இங்கு யாரென்றே தெரியாத ஒருவன், 'ஹலோ' என்று கூப்பிட்டதும்


எங்கிருந்து புன்னகை வந்தது என்று தெரியவில்லை...............எல்லாம் 'நாம் இந்தியர்கள்' என்ற உணர்வு தான்.. ஹிஹிஹி!




அழகான சிரிப்புடன் அருகில வந்தான்.


"ஹலோ தேசி, விச் பார்ட் ஆஃப் இந்தியா" என்றான்[இங்கு இந்தியர்களை சக இந்தியர்கள் 'தேசி' என்றே விழிக்கிறார்கள்]




"தமிழ்நாடு"




"அட.........தமிழ் பொண்ணா? நினைச்சேன் நீ தமிழ்நாட்டுக்காரியாத்தான் இருக்கனும்னு"




"எப்படிங்க?"




"இப்படி பேந்த பேந்த முழிக்க தமிழ்காரிகளால மட்டும் தான் முடியும், சரி , உன் பெயர் என்ன, எந்த டிபார்ட்மெண்ட்? எந்த ஊரு த்மைழ்நாட்டுல?"




"நான்......என் பேரு.."




"ஹே இதென்ன கைல "சோத்து டப்பா" வா?? , அடப்பாவி நீ காலேஜ்க்கு போகாமா நேரா ஸ்கூல்ல இருந்து இங்கே படிக்க வந்துட்டீயா.........இப்படி 'சோத்து டப்பா" எல்லாம் எடுத்துட்டு வரே?"




"இல்லங்க.........ஆஃப்டர்னூன்......லஞ்ச்..."




"சரி சரி.........அப்படி ஸ்டோன் பெஞ்சில உட்கார்ந்து சாப்பிடலாம் வா"





என் பதிலுக்கு காத்திராமல் முன்னால் நடந்தான்.




உட்கார்ந்ததும் கேட்டான்,


"சரி நான் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கா பதில் சொல்லு "




" என்ன கேட்டீங்க"




"அம்மா தாயே , நான் நிறைய கேள்வி கேட்டுட்டேன், மறுபடியும் சொல்ல தெம்பில்லமா...........சரி 'சோத்து டப்பா" ஓபன் பண்ணு, என்ன கொண்டு வந்திறுக்கன்னு பார்க்கலாம். வீட்டு சாப்பாடா? ஆமா நீ இங்கே எங்கே இருக்க?"




" நான்.........."




" ஹே இப்படிதான் பேசுவியா.......இல்ல நடிக்கிறியா, இதுவரைக்கும் ஒரு கேள்விக்கு கூட நீ பதில் சொல்ல"




" நீங்க வேகமா கேட்கிறீங்க, என்னால பதில் சொல்ல முடியலீங்க"




"சரி சரி, பாவம் பொண்ணு, மெதுவாவே கேட்குறேன்.........ஹே, ஆர் யு ஃப்ரம் கோயம்பத்தூர்??"




"ஆமாங்க....எப்படிங்க....கண்டுபிடிச்சீங்க"




"இதான்.....இந்த 'ங்க' தான்..........ஒவ்வொரு வார்த்தைக்கு ஒரு 'ங்க' போடுற.........மரியாதை தெரிஞ்ச ஊரு கோயம்பத்தூராச்சே"




"ஆமாங்க"




"சரிங்க............முதல்ல உன்னை பத்தி கேட்டதுக்கெல்லாம் கட கடன்னு பதில் சொல்லு பார்ப்போம்"




நான் திக்கி தினறி சொல்லி முடிக்க, அவனும் இடையிடையே கிண்டலும் கேலியுமாக பேசினான்,


என் 'லஞ்ச் பாக்ஸ்' திறந்து சாப்பிட அவன் முற்பட, அவன் செல்ஃபோன் அழைத்தது, எடுத்து நம்பர் பார்த்துவிட்டு..........




"மை கேர்ள் ஃபிரண்ட் இஸ் ஆன்லை, காட் டு கோ, கேட்ச் யூ லேட்டர்"




வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்தது என் நட்பு.............


கை ஆட்டி ஆட்டி ஃபோன் பேசியபடி போகும் அவனை பார்த்துக்கொண்டிருந்தேன்,




அவன் கேட்ட கேள்விகளுக்கு விடை அளிக்க நேரம் சரியாக போனாதால்...........அவன் பெயர் என்ன............இங்கு எந்த டிபார்ட்மெண்டில் என்ன படிக்கிறான்.........எந்த விபரமும் தெரியாமல்.................




என்னை தேடி வந்த நட்பு சென்ற திசையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்......!!!




6 comments:

அம்முனு பேர மாத்திட்டீங்க!

February 12, 2008 at 5:24 PM  

கதை நல்லா தான் இருக்கு :) சொந்த கதையோ????

February 12, 2008 at 5:24 PM  

unga experience ellam nalla irukkunga ammu

நட்போடு
நிவிஷா

February 12, 2008 at 6:36 PM  

ஹேய் அம்மு சூப்பரா கதையும் எழுதறயே... நல்லா இருக்கு...:)))

February 20, 2008 at 7:22 PM  

ஸைட் வீடியோ இப்போ தான் பார்த்தேன். டெம்ப்ளேட் எப்ப மாத்தனீங்க?

June 3, 2008 at 6:12 PM  

டெம்ப்ளேட் பார்த்து சொல்ல வந்த மேட்டர் சொல்லாம போயிட்டேன்....

வீடியோ.... என்ன சொல்ல வறீங்க?

June 3, 2008 at 6:13 PM  

Older Post Home